×

பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: இசையரசியான இவரை கவுரவிக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில், மதிப்புறு முனைவர் பட்டத்தை திரையிசை பின்னணிப் பாடகி திருமதி பி. சுசீலா அவர்களுக்கு வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான திரு.மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப, துணை வேந்தர் முனைவர் சீ. சௌமியா, பதிவாளர் திருமதி சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான திரு. டி.எம். கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.

The post பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : B. Susila ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Dr. ,J. JAYALALITHA UNIVERSITY OF MUSIC POETRY ARTS ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...